திருவரங்கத்தில் காங்கிரஸ் சார்பில் நீர் மோர் பந்தல் திருநாவுக்கரசர் எம்.பி இன்று திறந்து வைத்தார்.
திருவரங்கத்தில் காங்கிரஸ் சார்பில் நீர் மோர் பந்தல் திருநாவுக்கரசர் எம்.பி இன்று திறந்து வைத்தார்.
திருவரங்கம் மற்றும் திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக திருவரங்கம் காமராஜர் பவனில் கோடைகால நீர் மோர் தண்ணீர் பந்தலை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான சு.திருநாவுக்கரசர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ், திருவரங்கம் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தர்மேஷ், புத்தூர் கோட்ட தலைவர் மலர் வெங்கடேஷ், மூத்த தலைவர்கள் ஜெயராஜன், பாதயாத்திரை நடராஜன், வார்டு தலைவர்கள் யோகநாதன், ஹீரா, ராமதாஸ், கிருஷ்ணன், மோகன், குமார், ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.