தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கோடை கால சிறப்பு விற்பனை நடைபெற்றது.
திருச்செந்தூர், எரல், தூத்துக்குடி ஜவுளிக் கடைகளில் ரூ.3ஆயிரத்திற்கும் மேல் ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் 120பேர் தேர்வு செய்யப்பட்டு விமானத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்தின் உரிமையாளர்கள் திருநாவுக்கரசு, அரிராமகிருஷ்ணன், நமச்சிவாயம், மற்றும் மேலாளர்கள் ஊழியர்கள் செய்திருந்தனர்.
சுற்றுலா குறித்து வாடிக்கையாளர்கள் கூறும்பாேது, “இதுவரை எந்த ஒரு ஜவுளி நிறுவனமும் வழங்காத புதிய முயற்சியாக இது உள்ளது. இதில் உள்நாட்டு பயணமாக மணாலிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டோம். வெளிநாட்டு பயணமாக மலேசியா நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சென்றோம். எங்கள் அனைவருக்கும் தங்குமிடம், உணவு, பயண வசதிகள் அனைத்தும் கே.சின்னத்துரை அன்கோ சார்பில செய்து கொடுக்கப்பட்டது. குடும்பத்துடன் விமான பயணம் மேற்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்தனர்.