தூத்துக்குடி ஆட்டு வியாபாரி கொலை. கொந்தளித்த மக்கள். நடவடிக்கை வேண்டி பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அறிக்கை.

தூத்துக்குடி ஆட்டு வியாபாரி கொலை. கொந்தளித்த மக்கள். நடவடிக்கை வேண்டி பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அறிக்கை.

பன்னம்பாறை தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யவும், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரணம் வழங்கவும் வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு பன்னம்பாறையைச் சோ்ந்த சண்முகம் மகன் சுடலை (52). இவர் ஆடு வளா்த்து வந்தாா். ஆழ்வாா்திருநகரி அருகேயுள்ள தேமாங்குளம் அருகே வயல்வெளியில் கிடை அமைத்திருந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த மாற்று சமூகத்தினர் ஒருவர் தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த ஆக. 29 ஆம் தேதி சுடலை ஆடுகளை பராமரித்து மேய்த்துகொண்டிருந்த மணிகண்டன் என்பவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தான் ஆகஸ்டு 30 ம் ஆட்டுப்பட்டியில் தூங்கி கொண்டிருந்த சுடலை மா்மநபா்களால் வெட்டிக்கொல்லப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீஸாா் தேடி வருவதுடன், இருவரை பிடித்து விசாரித்தும் வருகின்றனா்

இந்நிலையில் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளம் -திருச்செந்தூா் சாலையில் அவரது உறவினா்கள் திடீா் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் டிஎஸ்பிக்கள் சாத்தான்குளம் சுபக்குமாா், திருச்செந்தூா் வசந்த்குமாா், ஸ்ரீவைகுண்டம் ராமகிருஷ்ணன், சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி, காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினா். அப்போது, குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று மறியலை கைவிட்டனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ்  விடுத்துள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது*

நெல்லை – தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ச்சியாக யாதவ சமுதாயத்தினர் 13 பேர் படுகொலை செய்யபட்டுள்ளனர்.  இதுவரை வருடங்கள்தான் கடந்துள்ளது ஆனால் இதுவரை இக்கொலையாளிகளில் எவர் ஒருவரும் நீதிமன்றத்தினாலோ, காவல்துறையினராலோ தண்டனை பெற வில்லை. சில நாட்களிலே சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வரும் கொலையாளிகள்  மேலும் மேலும்  தைரியமாக பல கொலைகளை செய்கின்றனர்.இந்த உண்மை  நேர்மையான காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் நன்றாகவே தெரியும்.

உடனடியாக  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சங்கர் ஜூவால் அவர்கள் இப் பிரச்சினையில் தலையிட்டு பன்னம்பாறை சுடலையை கொன்றவர்களை கைது செய்யவும்*இதுவரை 13 அப்பாவி  யாதவர்களை கொன்ற* குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமாக கடும் தண்டனை பெற்றுத் தரவும, இனி ஒரு அப்பாவி யாதவர் உயிர் பலியாகாத வண்ணம் உரிய அதிரடி  நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும்  யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம்.

இவ்வாறு பாரதராஜா யாதவ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்