குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மூன்று பேர் கைது.
குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மூன்று பேர் கைது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள RGB ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் நந்தகுமார் (24), கோட்டையம் ராஜப்பன் என்பவரின் மகன் அகில் (28) மற்றும் ஆலப்புழா முரளி என்பவரின் மகன் ஆனந்த் (28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.