நாகை மாவட்டம், அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் மூன்று நினைவு தின விழா கொண்டாட்டம்.

நாகை மாவட்டம், அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் மூன்று நினைவு தின விழாக்கள் கொண்டாட்டம்.

நாகை மாவட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளிகளில் அண்டர் காடு சுந்தரேசர் விலாஸ் அரசு உதவி தொடக்க பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் அடிக்கடி பல விழாக்களை கொண்டாடி மாணவ, மாணவிகளையும் பெற்றோர்களையும் அந்த பள்ளி தலைமை மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மகிழ்ச்சி படுத்தி ஊக்குவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று 1)தேசிய சூடான தேநீர் தினம்,  2)சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்,  3) தேசிய இளைஞர் தினம் ஆகிய 3 தினங்கள் நினைவு கூர்ந்து கொண்டாடப்பட்டன.

இத்தினங்கள் எதற்காக, ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவ, மாணவியர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினார்கள்.  மாணவ, மாணவிகளின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பெற்றோர்களும் பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும் திருவாளர்கள், செயலாளர் R.ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் T. இரவீந்திரன், ஆசிரியர்கள் ச.சந்திரசேகரன், U.சரண்யா, M.இலக்கியா, ப.விஜயலக்ஷ்மி, ஆனந்தன்,  மு.வீராசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள், பொங்கல், வாழைப்பழம், கரும்புகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கான அனைத்து ஏற்படுகளையும் ஆசிரியை வசந்தா செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்