திருச்செந்தூர் கோவிலில் நடை திறப்பு: பரிகார பூஜைக்கு பின் பக்தர்கள் அனுமதி!
திருச்செந்தூர் கோவிலில் நடை திறப்பு: பரிகார பூஜைக்கு பின் பக்தர்கள் அனுமதி!
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் யானை தாக்கி 2பேர் இறந்த நிலையில் பரிகார பூஜைக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று மதியம் 3 மணி அளவில் தெய்வானை யானை மிதித்து 2 பேர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, அனைத்து நடைகளும் அடைக்கப்பட்டன.
பின்னர் மாலை 5 மணிக்கு மேல் 2 பேர் பலியான இடத்தில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு அந்தப் பகுதியில் சிறப்பு தீபாரணை நடந்தது. அதன் பின்பு மாலை 6 மணியளவில் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாரணை நடந்தது. அதன் பின்பு கோவிலுக்குள் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.