உலக நன்மைக்காக, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் 1008 திருவிளக்குபூஜை.

உலக நன்மைக்காக, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் 1008 திருவிளக்குபூஜை.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்.ஆடி செவ்வாயை முன்னிட்டு திருவானைக்கோயிலில் திருமணம் தடை,குழந்தை வரம், வீடுகளில் செல்வங்கள் பெருக , தோஷங்கள் நீங்க மற்றும் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை பிரார்த்தனை செய்து குத்து விளக்கு ஏற்றி மனம் உருகி வழிபட்டனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்