குளித்தலை, கிருஷ்ணராயபுரம், முசிறி, மண்ணச்சநல்லூர் பகுதிம க்களின் தாகம் தீர்க்க காவிரியில் நீரேற்று நிலையம் அமைத்து தீர்வு காண்போம். அமைச்சர் கே என் நேரு உறுதி.
குளித்தலை, கிருஷ்ணராயபுரம், முசிறி, மண்ணச்சநல்லூர் பகுதிம க்களின் தாகம் தீர்க்க காவிரியில் நீரேற்று நிலையம் அமைத்து தீர்வு காண்போம். அமைச்சர் கே என் நேரு உறுதி.
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை மேற்கு ஒன்றியம். குளித்தலை கிழக்கு ஒன்றியம்
மற்றும் குளித்தலை நகர் பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு
கிராமம் கிராமமாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தை கே.பேட்டை பஞ்சாயத்து திம்மாச்சிபுரத்தில் தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து வீரவல்லி, ஐநூற்று மங்களம், சீகம்பட்டி, புதுப்பட்டி,
வதியம் , நங்கவரம் , குளித்தலை நகர் பகுதி என 55 க்கும் மேற்பட்ட இடங்களில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுப்பயணம் செய்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். இறுதியாக குளித்தலை பேருந்து நிலையத்தில் இரவு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
வேட்பாளர் அருண் நேருவுக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் மேள தாளங்கள் முழங்க, பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்தும், நெற்றியில் வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர்
கே.என்.நேரு பேசியதாவது;-
இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் 9 தொகுதிகளை உள்ளடக்கியது. திருச்சி மாவட்டத்திற்கு நம்முடைய முதலமைச்சர் 3 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினார். வளர்ச்சிப் பணிகளை செய்து முடித்து இருக்கிறோம்.
கரூரை எடுத்துக் கொண்டால், மாவட்ட கழக செயலாளர் செந்தில் பாலாஜி எதை கேட்டாலும் செய்து தருகிற முதலமைச்சர் நமது முதலமைச்சர்.
குளித்தலையில் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்ட பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை குளித்தலையில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தற்பொழுது ரூபாய் 46 கோடியில் கட்டிடப் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது.
நமது பிரதான பணி என்ன என்று சொன்னால், காவிரியின் அந்தப் பக்கம் முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகியவையும், இந்தப் பக்கம் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளுக்கு காவிரியில் இருந்து நீரேற்று நிலையங்கள் அமைக்கும் திட்டம் மூலம் விவசாயிகளும்
பொதுமக்களும் பயன்பெறும் வகையில் திட்டம் உருவாக்கப்படும்.
பொதுமக்கள் மீதும் விவசாயிகள் மீதும் அக்கறை கொண்ட நம்முடைய அரசு இனி வரும் காலங்களில் இந்தத் திட்டத்தை கடமையாக எண்ணி செயல்படுத்துவோம்.
மத்தியில் நமது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமேயானால்,
நாம் நினைக்கிற அனைத்து பணிகளும் நிறைவேறும்.
விவசாயம் செழிக்கவும்,
வேலை வாய்ப்பினை உருவாக்கவும், பயனுள்ள இந்தத் திட்டத்தினை நிறைவேற்றியே தீருவோம்.
இன்றைக்கு இருக்கிற
மோடி அரசு சமூக நீதிக்கு எதிரானது.
சமூக நீதிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இதற்கு முன்பு இத்தகைய சமூக நீதி கொள்கைகளை அவர்கள் தேர்தலில் அறிக்கையாக தந்ததில்லை. ஆனால் இன்றைக்கு தனது தேர்தல் அறிக்கையில் சமூக நீதி
அரசாக தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
நீட் தேர்வை பொறுத்த வரையில் இது மாநில அரசுகளின் உரிமை என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் சொன்னார்கள். ஒன்றியத்தில் ஆளுகிற பிஜேபி அரசு 400 இடங்களை கைப்பற்றும் என்று. ஆனால் இன்றைக்கு நிலைமை 200-க்கு கீழாக பெறுவார்கள் என கருத்துக் கணிப்புகள் கூறுகிறது.
எனவே நமது இந்தியா கூட்டணி 270 இடங்களை கைப்பற்றினாலே ஆட்சி அமைக்க முடியும். நாம் 7 ல் ஒரு பங்காக இருக்கிறோம்.
எனவேதான், பெரம்பலூர் பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற நமது செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், நானும் இருக்கிறேன். நாம் இணைந்து மக்களுடைய குடிநீர் பிரச்சனை, விவசாயிகளுக்கான தண்ணீர் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இணைந்தே கட்டாயம்
நிறைவேற்றுவோம். என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
எனவே உதயசூரியனுக்கு வாக்களித்து அருண் நேருவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது,
வேட்பாளர் அருண்நேரு பேசியதாவது;
ஒன்றியத்தில் ஆளுகிற
அரசு தமிழகத்தை அனைத்து வளர்ச்சி திட்டங்களிலும் வஞ்சித்து மாற்றாந் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆறு மாதங்களாக நிதி வழங்காமல் இழுத்து அடிக்கிறார்கள். நாம் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் 26 பைசாவை மட்டும் தருகிறார்கள். ஆனால் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவர்கள் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் அவர்களுக்கு இரண்டு ரூபாய் 70 பைசா தருகிறார்கள்.
இந்த ஏற்றத்தாழ்வு தமிழ்நாட்டை மேலும் வளர்ச்சி பாதையில் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியாக செய்து கொண்டுள்ளார்கள்.
எனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, இந்தப் பகுதி மக்களின் குடிநீர் விவசாயத்திற்கு தண்ணீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நமக்கு ஆதரவான அரசு ஒன்றியத்தில் அமைய வேண்டும். அப்பொழுது தான் நாம் நினைக்கின்ற அத்தனை வளர்ச்சிப் பணிகளையும் மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்து வருகிற நலத்திட்டங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
எனவே நலத்திட்டங்கள் மென்மேலும் உங்களை வந்தடைய நீங்கள் கட்டாயம் வருகிற 19-ந் தேதி உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்து உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களுக்கு பணியாற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த மண்ணில் இருந்து கேட்கிறேன் மண்ணின் மைந்தனான எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார்.
பிரச்சாரத்தின் போது கரூர் மாவட்ட பொறுப்பாளர், மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா,
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம்,
குளித்தலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பரணி கார்த்திகேயன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமர், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன்,
கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன்,
மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தென்மொழி தியாகராஜன்,
மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் பல்லவி ராஜா, நங்கவரம் பேரூர் செயலாளர் முத்து (எ) சுப்பிரமணியன், குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, ஒன்றிய பொருளாளர் ரெங்கநாதன், வலையப்பட்டி சரவணன்,
மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்ரமணியன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், வட்டாரத் தலைவர் சித ஆறுமுகம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் முத்து செல்வன், நகர அவைத் தலைவர் சாகுல் அமீது, குளித்தலை நகர துணை செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், நகரமன்ற உறுப்பினர்கள் வி.பி. சேகர், ஆனந்தவல்லி செந்தில் குமார், பந்தல் சந்துரு, பொன்னர், மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.