திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பள்ளிவாசல்களில் பிரச்சாரம்.
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பள்ளிவாசல்களில் பிரச்சாரம்.
இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சிறுபான்மையினர் வாக்குகளை பெற அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி உறையூர் திரு தாந்தோணி ரோடு பகுதியில் உள்ள, “இஸ்மாயில் சுபேதார் பள்ளிவாசலில்” அதிமுக, எஸ்.டி.பி.ஐ தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வேட்பாளர் கருப்பையாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் மலர்விழி ஜெகநாதன், வட்டக் கழக செயலாளர்கள் பிச்சைமணி முருகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.