திருச்சி மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் எம். முஹமது ஷெரிப் பங்கேற்பு.
திருச்சி மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் எம். முஹமது ஷெரிப் பங்கேற்பு.
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பக்கிர் மைதீன் தலைமையில்,மாவட்ட அவைத் தலைவர் மிர்பஹா சேக் தாவூத் முன்னிலையில் பாலக்கரை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் எம். முஹமது ஷெரிப் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிா்வாகிகளை சந்திப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது, புதிய கிளைகள் கட்டமைத்து விரைவில் மாவட்ட பொதுக்குழுவை நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்வேஷ், ஷேக் அப்துல்லா, சுரேஷ் காந்தி, சடையன் அஸ்பாக் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.