திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம். மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்பு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட
அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம். மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்பு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் லால்குடி தெற்கு, வடக்கு ஒன்றிய கழகம், லால்குடி நகரம், பூவாளூர் பேரூர் கழகம் ஆகியவை சார்பில், தொடர் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் தலைமையில், திருச்சி லால்குடி ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,
லால்குடி, திருவரம்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளுக்குமான தெருமுனை பிரச்சார வாகனத்தை மாவட்ட கழக செயலாளர் ப.குமார் துவக்கி வைத்தார்.
திமுக அரசை கண்டித்து நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வம் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் திருச்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம் பாலன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ், சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் டோமினிக் அருள்ராஜ், ஒன்றிய கழகச் செயலாளர் சூப்பர் நடேசன், வழக்கறிஞர் அசோகன், நகரக் கழக செயலாளர் பொன்னி சேகர் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.