போக்சோ சட்டத்தில் இருவர் கைது
போக்சோ சட்டத்தில் இருவர் கைது
திருச்சியில் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நபர் மற்றும் அவருக்கு உதவிய சிறுமியின் தாயார் இருவரையும் போலீஸôர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருச்சி கோட்டை சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (53). இவர், ஜீயபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது, புவனேஸ்வரி வீட்டிற்கு சென்று வந்த சக்திவேல், பிளஸ் 1 படிக்கும் புவனேஸ்வரியின் 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். தனது தாயாரிடம் சிறுமி விவரம் கூறியபோது, இருவரும் சேர்ந்து, சிறுமியை மிரட்டியுள்ளனர்.
இது குறித்து சிறுமி அவரது அத்தையிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் அத்தை, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸôர் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து சக்திவேல் மற்றும் புவனேஸ்வரி இருவரையும் கைது செய்தனர்.