மதுரையில் ஃப்ரிட்ஜ் வெடித்த விபத்தில் ஏரல் குரங்கணி ஆசிரியை உட்பட இருவர் பலி.
மதுரையில் ஃப்ரிட்ஜ் வெடித்த விபத்தில் ஏரல் குரங்கணி ஆசிரியை உட்பட இருவர் பலி.
மதுரையில் நேற்று முன்தினம் பெண்கள் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரங்கணி பகுதியை சேர்ந்த சிங்க துரை என்பவருடைய மனைவி பரிமளா (55), எட்டயபுரம் தாலுகா பேரிலோவன் பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரண்யா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.