*திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது*
*திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது*
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, கீரனூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி டிஎஸ்பி. தனஞ்செயன் மேற்பார்வையில் சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் சார்பு ஆய்வாளர் சிவநாதன், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கண்ணன், அக்னிபுத்திரன் காவலர்கள் , சுகந்த குமார் மாசிலாமணி, மணி, சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சத்திரப்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 பேரை நிறுத்திய போது அவர்கள் போலீசாரிடம் தப்பித்து வேகமாக சென்று வேகத்தடையில் கீழே விழுந்து கால் ஒடிந்த நிலையில் கிடந்தனர். போலீசார் மனிதாபிமான அடிப்படையில் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் தென்காசி, ஆலங்குளம் பகுதியில் சேர்ந்த அருள்குமார், பேச்சிமுத்து என்றும் இவர்கள் மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்ததை அடுத்து 2 பேரையும் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 7 பவுன் தங்கநகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்