கள்ளிமந்தயம் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
கள்ளிமந்தயம் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி.கார்த்திகேயன் மேற்பார்வையில் கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சீனிவாசன் காவலர்கள் வேளாங்கண்ணி, கார்த்திக்ராஜன், மோரிஸ் ஜோசப்ராஜ், காங்கு மணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த பிரபாகரன்(30)நவீன்(27) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்