துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா.
தமிழக துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொரைஸ் கிளாரியான் பொழுதுபோக்கு மையத்தில் நடைபெற்ற ஒலி ஒளி தட்டின் வெளியிட்டு நிகழ்விற்கு திருச்சி கிழக்கு மாநகர கழக செயலாளரும் மண்டலம் 3 தலைவருமான மு.மதிவாணன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளிகல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு பாடல் வெளியிட்டார். பாடலை தலைமை நிலைய செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான எஸ் பூச்சி முருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, கவிஞர்சல்மா மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட மாநகர அணிஅமைப்பாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.