திருமணம் ஆகாத ஜோடியா இனி உங்களுக்கு அனுமதி இல்லை.. OYO செக்-இன் விதிகளில் அதிரடி மாற்றம்.

திருமணம் ஆகாத ஜோடியா இனி உங்களுக்கு அனுமதி இல்லை.. OYO செக்-இன் விதிகளில் அதிரடி மாற்றம்.

திருமணமாகாத ஜோடிகளுக்கு இனிமேல் அறை கிடையாது என்று OYO நிறுவனம் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த விதியை OYO நிறுவனம் இந்த வருட தொடக்கம் முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.

OYO என்பது இந்தியாவில் முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளம் ஆகும். OYO மூலம் முன்பதிவு செய்யப்படும் விடுதிகளின் விதிகளை நிறுவனமானது திருத்தி அமைத்துள்ளது.

இதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் உட்பட அனைத்து ஜோடிகளும் செக்-இன் செய்யும்போது, தங்கள் உறவுக்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

மீரட்டில் இந்த நடைமுறைக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். மீரட்டில் சமூக குழுக்களிடம் இருந்து வந்த கருத்துக்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

OYO தளத்தை பயன்படுத்தி திருமணமாகாது ஆண்- பெண் உறவு வைத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து ஒன்று நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்