அடப்பாவிகளா.. இவர்களை நம்பியா இத்தனை கோடி பயணிகள்?
அடப்பாவிகளா.. இவர்களை நம்பியா இத்தனை கோடி பயணிகள்?
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகளில் 995 பேர் போதையில் மிதந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கௌர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பல விவரங்கள் வெளிவந்துள்ளன.
அதுவும் மேற்கு ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே, வடக்கு ரயில்வே ஆகிய மூன்றே மூன்று மண்டலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மட்டும் இவ்வளவு பெரிய அக்கப்போர்.
மதுவிலக்கு தீவிரமாக அமுலில் உள்ள குஜராத்தில் மட்டும் பணியின் போது 104 லோகோ பைலட்டுகள் போதையில்..
மது நுகர்வு கண்டறியும் கருவியை வைத்து, பணி முடிந்து செல்லும் பைலட்டுகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில்தான் இந்த போதை விவகாரம் அம்பலமாகி உள்ளது.
சிக்கியவர்கள் சுமார் 1000 ரயில்வே பைலட்டுகள் என்றால், இவர்களில் 38 சதவீதம் பேர் பயணிகள் ரயில்களை இயக்கியவர்கள்.
இவர்களை நம்பித்தான் லட்சோப லட்சம் பயணிகள் ரயில்களில் பயணம் செய்திருக்கின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அனைத்து மண்டலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில் ரயில் லோகோ பைலட்டுகள் பணியின் போது அவர்களுடைய ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 1-20 mg/100ml இருந்தால் அவர்களை உடனே பணியில் இருந்து விடுவித்து அச்செயல் தொடர்பாக அவர்களின் சர்வீஸ் புக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
பைலட்டுகளின் ஆல்கஹால் அளவு
20mg/100 ml என்பதை தாண்டி இருந்தால் அவர்களை உடனடியாக டிஸ்மிஸே செய்யலாம் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
மூன்று மண்டலங்களுக்கே இவ்வளவு கூத்து என்றால் நாடு முழுக்க உள்ள மொத்த ரயில்வே மண்டலங்களிலும் எத்தனை போதை பைலட்டுகளோ?
இவர்களை நம்பித்தான் மக்களின் ரயில் பயணம் என்பதை நினைத்துப் பார்க்கும்போது தலை யேசுற்றுகிறது.