பாளையங்கோட்டை பகுதியில் குப்பை கூழங்கள் களத்தில் இறங்கிய வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர்.
பாளையங்கோட்டை பகுதியில் குப்பை கூழங்கள் களத்தில் இறங்கிய வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை 6 வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா தெரு மற்றும் அம்பேத்கர் காலனி பின்புறத்தில் பாளையங்கோட்டை சுற்று வட்டார பல வார்டுகளில் இருந்து அன்றாட மக்கள் பயன்படுத்தும் கழிவுகளை அண்ணா தெரு பகுதியில் மலை போல் குவித்து வைத்து அள்ளி செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு நோய் தொற்றும் துர்நாற்றமும் அதிக அளவில் பரவிக் கொண்டிருந்ததால். டெங்கு, மலேரியா, டைபாய்டு, போன்ற நோய்கள் அப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் பரவி வருகிறது.
இன்று அப்படி குப்பை கொட்ட வந்த லாரியை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் இறங்கினர். இனி மழை காலம் என்பதால் நெல்லை மாநகராட்சி அதிகாதிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக கழிவுகளை அகற்றி இனிவரும் காலங்களில் அங்கு கழிவுகளை கொட்டாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.