உளவு கருவி மூலம் ஆபாச வீடியோ. பல் மருத்துவ மாணவன் கைது.

சென்னையில் திரைப்பட பாணியில் ஒரு பெரிய சம்பவமே நடந்திருக்கிறது. பாபி சிம்ஹா, அமலா பால், பிரச்சன்னா நடிப்பில் வெளியான திருட்டுப்பயலே திரைப்படத்தில் கழிவறையில் ஸ்பை கேமராவை பிரச்சனா வைப்பார். அதன் மூலம் வீடியோக்களை எடுத்து ரசிப்பதாக படத்தில் காட்சிகள் இருக்கும். அப்படி ஒரு சம்பவம் சென்னை ராயபுரத்தில் நடந்துள்ளது.

சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen உளவு கருவி மூலம் ஆபாசமாகப் படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் (MDS) இப்ராஹிம் (36) கைது!

அப்பெண் சந்தேகம் அடைந்து, குளியலறை அருகே இருந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்தபோது அது உளவு பார்க்கும் கருவி என தெரியவந்தது. அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்..

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்