விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா ரவி கடற்கரை கிராமங்களில் கொண்டாட்டம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா ரவி கடற்கரை கிராமங்களில் கொண்டாட்டம்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார்.

இந்த மகிழ்வை தமிழகமெங்கும் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட, தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர், டிலைட்டா ரவி அவர்கள் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கிராமத்தில் மட்டுமல்லாமல் சில மீனவ கிராமங்களில் எழுச்சித் தமிழர் திருமாவளவனின் வெற்றியை அங்குள்ள மீனவ மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். அந்த மகிழ்வில் மீனவ கிராம மக்களும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை டிலைட்டா ரவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்