விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி திடீர் உடல்நலக் குறைவு. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி திடீர் உடல்நலக் குறைவு. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் புகழேந்தி. 71 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பிய புகழேந்தி, நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அப்போது மேடையிலேயே மயங்கி விழுந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

புகழேந்திக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து மருத்துவக்குழு விரைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த வேளையில் புகழேந்தி காலமானார்.

மருத்துவமனை முன்பு திமுகவினர் திரளானோர் கூடியுள்ளனர். காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து திமுகவினர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்