வாணியம்பாடி அருகே அரசு சார்பில் வீட்டுமனை வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.
வாணியம்பாடி அருகே அரசு சார்பில் வீட்டுமனை வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் 300க்கும் மேற்பட்டோர் கிராம மக்கள்
ஒன்றிணைந்து வேறு பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
ஏற்கனவே இந்த பகுதியில் இடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் கட்டவில்லை அதற்கு மாற்று இடமும் வழங்கவில்லை. சுற்று வட்டார மக்களுக்கு சுடுகாடு இல்லை. கால்நடை மருத்துவமனை இல்லை, பள்ளி கட்டிடங்கள் கட்ட இடம் ஒதுக்கவில்லை. இந்த நிலையில் வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றி அதில் இருந்த மக்களுக்கு தும்பேரி ஊராட்சியில் வீட்டு மனை ஒதுக்க வருவாய் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வருவாய் துறையினர் இடத்தை ஆய்வு செய்துளனர், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேறு பகுதிமக்களுக்கு வீட்டு மனை வழங்குவதை கைவிட வேண்டும் என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அம்பலூர் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் உமா ரம்யா தலைமையில் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வேறு பகுதிமக்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க மாட்டோம் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.