விராலிமலை பாழடைந்து மரங்கள் முளைத்த இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடம்: பக்தர்கள் அச்சம்.
விராலிமலை பாழடைந்து மரங்கள் முளைத்த இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடம்: பக்தர்கள் அச்சம்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-மணப்பாறை சாலையில் முனியப்பன் கோவில் அருகே சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மருத்துவர் குடியிருப்பு உள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் பூட்டப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. ஆட்கள் குடி இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்தின் சுற்றுப்பகுதி சுவர்களில் இருந்து பல்வேறு மரங்கள் முளைத்து வெளியே கிளை விட்டு கிடக்கின்றன பாழடைந்த கட்டடம் என்பதால் அதன் உள்ளே விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக கட்டிடத்தின் அருகில் உள்ள அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அருகே உள்ள முனியப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டடம் இடிந்து விழுந்து விடுமோ, மரக்கிளைகள் அறுந்து விழுமோ, விஷ ஜந்துக்கள் ஏதேனும் கோயிலுக்குள் புகுந்து தங்களை சீண்டிவிடுமோ என்ற அச்சத்தில் சாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பயன்பாடற்று பாழடைந்து கிடக்கும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அந்த மருத்துவர் குடியிருப்பை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தி அந்த இடத்தில் புதிய கட்டடம் எழுப்பி வாடகை கட்டத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகத்தை அமைத்து கொடுக்கும் பட்சத்தில் பொதுமக்கள் பயனடைவார்கள் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்து வேண்டும் என்பதே பக்தர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.