இளைஞர்களுடன் வாலிபால் விளையாட்டு. அசத்திய முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்.
இளைஞர்களுடன் வாலிபால் விளையாட்டு. அசத்திய முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அஇஅதிமுக நிர்வாகி வடிவேல் இல்ல காதணி விழாவிற்கு சென்று திரும்பியபோது வலையப்பட்டி பகுதியில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை பார்த்தவுடன் இறங்கிச் சென்று அவர்களுடன் வாலிபால் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்
பொதுவாகவே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது பெயரில் சி.வி.பி ஸ்போர்ட்ஸ் அகடமி நடத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு வீரர்களை பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களை பெற உதவியாக இருந்து வருகிறார்
இந்நிலையில் அவர் இளைஞர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடிய வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது