திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி கொள்ளிடத்திற்கு நீர் திறப்பு.
திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி கொள்ளிடத்திற்கு நீர் திறப்பு.
அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நேற்று அமராவதி அணையிலிருந்து 36 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் திருச்சி முக்கொம்பு மேலணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு இன்று நீர் வரத்து 17,000 கன அடியாக உள்ளது. அதில் 10000 கன அடி நீர் காவேரியிலும் 7000 கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.