கடையநல்லூர் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.

கடையநல்லூர் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் மகாலிங்கம் ஏற்பாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு 1500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் 2000 பேருக்கு அறுசுவை விருந்தும் வழங்கினர். நிகழ்ச்சிக்கு முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார் மாவட்டத் துணைச் செயலாளரும் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.சாமித்துரை,ஆகியோர்முன்னிலை வகித்தார் முன்னாள் நகரச் செயலாளர் முகமது அலி அனைவரையும் வரவேற்றார்.

கடையநல்லூர் நகர மன்ற 30 வது வார்டு கவுன்சிலரும் மாவட்ட அவைத் தலைவருமான சுந்தரமகாலிங்கம் தனது வார்டுக்கு உட்பட்ட  ஒரு முதியவரின் வீடு மழையால் இடிந்து விழுந்தது. தொடர்ந்து தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த அந்த முதியவருக்கு தன்னுடைய சொந்தச் செலவில் சிறிய அளவில் ஒரு வீடு கட்டி கொடுத்து அதனுடைய சாவியை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வார்டுக்கு உட்பட்ட 1500 நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அறுசுவை விருந்தும் வழங்கினார் இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்