யாரய்யாநீ…. இத்தனை நாளாய் நீ…எங்கிருந்தாய் . இதோ ஒர் விஜயாபதி ரஹ்மான்

யாரய்யாநீ…. இத்தனை நாளாய் நீ…எங்கிருந்தாய்

என்று சிலர் ஆச்சர்யத்தோடு சிலரை கேள்வி கேட்பார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் விஜயாபதி ரஹ்மான்.

 நெல்லை மாவட்டம் கடற்கரை ஒர ஒர் அழகியல் கிராமம் தான் விஜாயபதி. குறைந்த அளவே மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் நிறைந்த மனசுக்காரர் தான் விஜயாபதி ரஹ்மான். மதத்தால் இஸ்லாமியன்…ஆனால் குணத்தால் மதங்களை கடந்தவன். மீனவர்களுக்கு ஒரு துயரமா……. அண்ணாச்சி நான் இருக்கிறேன். என்று அவர்களின் துயரங்களை துடைப்பவன். கூடங்குளம் மேல்நிலை பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி அவர்கள் உணவு உண்ணுவதை ஒரு குழந்தையாய் ரசித்தவன். தான் சார்ந்த இயக்க தோழர்களின் விழாக்களுக்கு தாராள நிதியுதவி கொடுத்து நண்பணாய் தோல் கொடுத்தவன். தான் படித்த பள்ளிக்கு இலவச மடி கணினி வழங்கி ஒரு மாணவனாய் தன் கடமையை செய்தவன்

ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை இருதய நோயால் ஆபரேஷன் பண்ண பணமில்லாமல் தவிக்க, இதோ நான் இருக்கிறேன் என்று சொல்லி லட்சக்கணக்கில் செலவு பண்ணி அந்த ஏழை குடும்பத்தின் இதயங்களை கவர்ந்தவன்.

கடற்கரை சாலைகளை பழுது பார்த்து கொடுத்த, விளக்கற்ற வீதிகளை மின் விளக்குகளால்  அலங்கரித்த, குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடியபோது அவர்களின் தாகம் தீர கிராமம் தோறும் போர்வெல் போட்டு கொடுத்த ஏழைகளின் பங்காளன். சமீபத்தில் நடந்த திருசெந்தூர் அருகே உள்ள குலசை முத்தாரம்மன் பாதயாத்திரை  பக்தர்களுக்கு, தண்ணீர், பிஸ்கெட், ஜூஸ், என்று லட்சக்கணக்கான மக்களுக்கு அள்ளி வழங்கி பக்தர்களையே ஆச்சர்யபடவைத்தவன்.

இதோ இப்போது மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக  பாதிக்கப்பட,  அத்தியாவசிய பொருட்களுக்கே அவர்கள் அல்லாடுவதை கண்ட ரஹ்மான். நெல்லையிலிருந்து அவசரமாக கிளம்பி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று  மக்களை தண்ணீர் தேங்கிய குட்டைகளில் நடந்து வீடு வீடாக, வீதி வீதியாக  சந்தித்து அவர்களுக்கு உணவு போன்ற அத்தாயாவசிய பொருட்கள் வழங்கி நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லி, அவர்கள் துன்பத்திலும் பங்கெடுத்து கொண்டிருப்பவன்.

ஆளும் திமுகவில் எந்த பதவியும் இல்லாமல் தலைமை ஆனைக்கினங்க ஓடி ஓடி செயலாற்றும் செயல் மறவன். கட்சியால் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு பண்ணவே தயங்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், தன் சொந்த பணத்தை மக்களுக்காக, செலவு பண்ணி தான் சார்ந்த பகுதிகளில் அந்த கட்சியையை தலை நிமிர செய்து அந்த பகுதி அரசியல்வாதிகளையே மிரள செய்தவன்.

இன்னும் நிறைய பணிகளை ஓடோடி செய்து கொண்டிருப்பவன்.

 கடமையை செய்….பலனை எதிர்பாரதே.

அஸ்ஸலாமு அலைக்கும் பாய்…!

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்