இன்னும் சில மணி நேரங்கள் தான் ஆட்சி அமைக்க போவது யார்?
இன்னும் சில மணி நேரங்கள் தான் ஆட்சி அமைக்க போவது யார்?
18-ஆவது மக்களவைத் தோ்தல் கடந்த மார்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கடந்த 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் 60.20 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் 8.30 மணிக்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில மணி நேரங்கள் தான் மிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்தும் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை வென்று ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார் என்று தெரிந்துவிடும்.