மதுரையில் கணவர் கண்முன் மனைவியின் நகை கொள்ளை.

மதுரையில் கணவர் கண்முன் மனைவியின் நகை கொள்ளை.

மதுரை மாவட்டத்தில் உள்ள பந்தடி பகுதியில், சம்பவத்தன்று இளம் தம்பதி தங்களின் இருசக்கர வாகனத்தில் வந்தனர். இவர்கள் வீட்டு வாசலில் நின்றபோது பெண் தனது வாகனத்தில் இருந்து இறங்க முயற்சித்தார்.

அப்போது, தம்பதியை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில்  வந்த கொள்ளை கும்பல், பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தது. வாகனத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட பெண்ணை, அக்கும்பல் தரதரவென இழுத்துச் சென்றது. இதனால் நிலைதடுமாறி வாகனத்தில் இருந்து கணவரும் கீழே விழுந்தார். பெண் சில மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டு, அவரின் 3 சவரன் சங்கிலியில் 1.5 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்