கேரளா வாழ, தமிழன் சாகனுமா? பேருந்தும் கனிமவள லாரியும் மோதி சிறுவன் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம்! இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கொந்தளிப்பு.
கேரளா வாழ, தமிழன் சாகனுமா? பேருந்தும் கனிமவள லாரியும் மோதி சிறுவன் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம்! இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கொந்தளிப்பு.
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் குத்துக்கல்வலசை அருகே தனியார் பேருந்தும் கனிம வளலாரியும் அதிவேகத்தில் வந்து நேருக்கு நேர் மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து. இதில் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் பலி என தகவல்.
இந்த விபத்து சம்பந்தமாக இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கூறுகையில், எத்தனையோ நேரங்களில் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இந்த கனிமவள வாகனங்களை ஓட்டுபவர்களில் ஒரு சிலர் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர்.
இதனால் மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதன் விளைவு இன்றைக்கு மிகப்பெரிய விபத்து நடந்துள்ளது.
கேரளா வாழ தமிழன் சாகனுமா? இனியும் மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் இதற்க்கு ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டும் என்று கொந்தளித்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் நேரில் ஆய்வு.