கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக உயிரிழப்பு – ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை.
கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக உயிரிழப்பு – ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் நவீன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் ஒன்றாக பணியாற்றிய நிலையில், காதலித்து கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்
திருப்பூரிலேயே வேலை செய்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் பல்லடம் காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆனதாக கூறி ஐஸ்வர்யாவை திட்டமிட்டு அழைத்து சென்று கடந்த 3ம் தேதி கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா இறந்த தகவலை கூட, யாருக்கும் தெரிவிக்காமல் சடலத்தை எரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயம் தற்போது வெளியே தெரியவர கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் ஐஸ்வர்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய கணவர் நவீனும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஆணவக் கொலையா என்று காவல்துறை விசாரணை செய்தும் வருகின்றதாக சொல்லப்படுகிறது.
சாதிய தீண்டாமை படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம்
தமிழக அரசு உடனடியாக இயற்றப்பட வேண்டும்! என்ற கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.