வெள்ளநீர் கால்வாய் பணியில் எவ்வளவு முறைகேடு தரமற்ற பணி நடந்து இருப்பது அப்பாவு அவர்களுக்கு தெரிந்து இருக்குமோ ? சாமான்யன் கேள்வி?
வெள்ளநீர் கால்வாய் பணியில் எவ்வளவு முறைகேடு. தரமற்ற பணி நடந்து இருப்பது அப்பாவு அவர்களுக்கு தெரிந்து இருக்குமோ ? என்று சாமான்யன் ஒருவர் கேள்வி கேட்டு வீடியோ அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தங்களின் கவனத்திற்கு இதை கொண்டு வருகிறேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பேரவை தலைவர் திரு அப்பாவு அவர்கள் நீங்கள் கூறியதாக தான் வெள்ளநீர் கால்வாய்யில் வெள்ளோட்டம் பார்க்க தண்ணீர் திறந்து விட்டோம் என்கிறார் .
வெள்ளநீர் கால்வாய் பணிகள் முடிந்து விட்டது என்ற அறிக்கை விட்டுவிட்டு தண்ணீர் திறந்து விட்டார் சபாநாயகர் அப்பாவு அவர்கள்.
அப்பாவு அவர்களின் அறிக்கை படி
கால்வாய் திட்டம் முடிவு பெற்றால் எனது கிராமத்தில் கட்டபட்டுள்ள அணைக்கட்டுல் இருந்து திசையன்விளை வரை செல்வதற்கு உள்ள அணைக்கட்டின் 12 ஷெட்டர் ஏன் திறக்கப்படவில்லை இது சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு தெரியுமா ?
அப்பாவு அவர்கள் என்னுடைய கிராமத்தில் உள்ள அணைக்கட்டை மறந்து விட்டார்கள் போல…..
இல்லாவிட்டால் பரப்பாடி பகுதியில் நின்று நாம் வெள்ளாங்குளியில் திறந்து விட்ட தண்ணீர் இங்கு வருகிறதா என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் சேர்ந்து பார்வையிட்டு கொண்டு இருப்பது மடதனத்தின் உச்சகட்டம்..
அப்பாவு திறந்து விட்ட தண்ணீர் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்போது வரையில் அவருக்கு தெரியுமா தெரியவில்லை….
எனது கிராமத்திற்கு நேரில் வந்து பார்த்தால் தெரியும்.
வெள்ளநீர் கால்வாய் பணியில் எவ்வளவு முறைகேடு
தரமற்ற பணி நடந்து இருப்பது அப்பாவு அவர்களுக்கு தெரிந்து இருக்குமோ ?
அல்லது இத்திட்டம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர்களை காப்பாற்ற இத்திட்டம் முடிந்து விட்டது என்று அறிக்கை விடுகிறாரா ? என்று சாமன்யன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.